டிரஸ்ட் நோக்கம்:-
1. நம் ஒட்டுமொத்த குடும்பத்தில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுபவர்களுக்கு மருத்துவம், கல்வி, அடிப்படை வசதி, குறைந்த கால அடிப்படையில் கடனுதவி, திருமண உதவி இன்னும் பல உதவிகளை செய்தல் மற்றும் தேவைக்கேற்ப வேறு அமைப்புகள் மூலம் உதவிகள் பெற்றுக் கொடுத்தல்.
2. நமது அக்கம் பக்கத்தவர்களில் பொருளாதார மற்றும் அடிப்படை வசதி தேவையுடைய ஏழைகளுக்கு, முடிந்த அளவு உதவியோ அல்லது வேறு அமைப்புகள் மூலமாக உதவிகளோ பெற்றுக் கொடுத்தல்.
3. சமூக நலனுக்காக பல்வேறு முகாம்களை (மருத்துவம், சமூக விழிப்புணர்வு, கல்வி ஃ வாழ்க்கை வழிகாட்டி) நடத்துவது மற்றும் ஏற்பாடு செய்வது.
4. அரசாங்க உதவி(நல) திட்டங்கள் (பொருளாதார, மருத்துவ, கல்வி மற்றும் பல) நமதூர் ஏழை, எளிய மக்களைச் சென்றடைவதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வது மற்றும் அவைகளை தகுதியானவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்வது.
5. இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரம் (முஸ்லீம்கள் மற்றும் மாற்றுமத அன்பர்களிடையே) முறையாக சென்றடைவதற்குத் தேவையான ஒத்தாசைகளை செய்வது.
6. குடும்பத்தினர் தர விரும்பும் ஜகாத் தொகைகளை வசூல் செய்து அதற்குத் தகுதியான மக்களுக்கு (குடும்பத்திற்கு உள்ளும், வெளியிலும்) விநியோகம் செய்தல். அதற்காக தனி கணக்குகளை பராமரித்தல்.
டிரஸ்ட் நிதி ஆதாரம்:-
1. டிரஸ்ட் அங்கத்தினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நன்கொடை (ஸதகா) மற்றும் ஜகாத்களின் மூலம் நிதியை திரட்டுதல். (நிர்பந்தம் இல்லை).
முக்கிய குறிப்புகள்:-
1. பொருளாதார கையிருப்பைப் பொறுத்தே உதவிகள் அமையும்.
2. உதவி தேவைப்படுவோர் எழுத்து மூலம் விவரத்தை திட்டக்குழுவிடம் கொடுக்க வேண்டும்.
3. திட்டமிடும் குழுவே, செய்யும் உதவிகளை பரிசீலித்து, ஆலோசித்து தீர்மானிக்கும்.
4. தேவைக்கேற்ப டிரஸ்டின் செயல்பாடுகளை திட்டக்குழு அதிகரித்துக் கொள்ளலாம்.
5. டிரஸ்டின் அடிப்படையான நோக்கம் எக்காலத்திலும் மாற்றப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ்.
6. ஆண்டுக்கு ஒருமுறையாவது, டிரஸ்டின் அங்கத்தினர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் (மஷ{ரா) நமதூரில் வைத்து ஒன்றும் தம்மாமில் வைத்து ஒன்றும் நடைபெற வேண்டும்.
7. சகோ. ஜலாலியை ரூ.500 மாத உதவி தொகை கொடுத்து அரசாங்க உதவிகளை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் ஆலோசனையையும், ஒத்துழைப்பையும் பெறுவது.
8. முதல் வருடத்திற்கான நிதியை விரும்பும் குடும்ப உறுப்பினர்கள் தரலாம்.
9. டிரஸ்டிற்கு நிரந்தர வருவாய் ஏற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது.
No comments:
Post a Comment